×

‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கையில் வாழ்ந்து பல ஆண்களை ஏமாற்றிய பாஜ பெண் நிர்வாகி: போட்டுக்கொடுத்த மகன்

புதுக்கோட்டை: லிவிங் டுகெதர்’ வாழ்க்கையில் வாழ்ந்து பல ஆண்களை ஏமாற்றிய பாஜ பெண் நிர்வாகியை மகனே போட்டுக்கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஞானசேகர் (57). மனைவியை பிரிந்து வாழும் இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மறுமணம் செய்வதற்காக டைவர்ஸி மேட்ரிமோனி என்ற இணையதள முகவரியில் பெண் வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார். அதில், அவருக்கு புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த ஹேமா மாலினியின் (59) ப்ரொபைல் கிடைத்துள்ளது. அதில் ஹேமாமாலினியும் இரண்டாவது திருமணத்திற்காக விண்ணப்பித்திருப்பதும், அவருக்கு விக்னேஸ்வரன், விக்ரம் என்ற 2 மகன்கள் உள்ளதையும் குறிப்பிட்டிருந்துள்ளார்.

இதையடுத்து ஹேமாமாலினியை தொடர்பு கொண்ட ஞானசேகரன், 10 தினங்களாக பேசி உள்ளனர். இருவருக்கும் பிடித்துபோனதால் ஈரோட்டில் 6 மாத காலம் லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் ஞானசேகர், ஹேமமாலினியை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறிய போது, நாம் இருவரும் நன்றாக வசதியாக வந்த பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி திருமணம் செய்து கொள்வதை ஹேமமாலினி தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் ஹேமமாலினி, அமெரிக்காவில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த பிரேம்குமார், தனது தாய் வழி சொந்தம் என்றும், அவர் ஆலங்குடியில் ரூ.15 லட்சத்திற்குள் வீடு ஒன்றை கட்ட சொல்லியுள்ளார் என்று ஞானசேகரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து புதுக்கோட்டை நரிமேடு அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் கடந்த 2023 ஜனவரி மாதம் முதல் வீடு எடுத்து ஹேமாமாலினியும், ஞானசேகரும் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் ஹேமா மாலினி நடவடிக்கை பிடிக்காமல் அவரது இரண்டாவது மகன் விக்ரம் பிரிந்து சென்றுள்ளார். பின்னர் மூத்த மகன் விக்னேஸ்வரன் ஞானசேகரை தொடர்பு கொண்டு, ‘தனது தாய் சரியில்லாதவர். அதனால் அவரை விட்டு பிரிந்து சென்று விடுங்கள்’ என கூறியுள்ளார். இதனால் ஞானசேகருக்கு, ஹேமாமாலினி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் ஹேமாமாலினி தூங்கும் போது, அவரது மொபைல் போனை ஞானசேகர் பார்த்த போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் அவருக்கு தெரிய வந்துள்ளது. அதில் ஹேமாமாலினி, இமெயில் கணக்கில் தாய் வழி சொந்தம் என்று கூறிய பிரேம்குமார், ஹேமாமாலினியை திருமணம் செய்து கொள்ளப்போவதும், டைவர்சி மேட்ரிமோனியில் தான் பிரேம்குமாரும், ஹேமாலினிக்கு அறிமுகமாகியுள்ளார். விசா எடுத்து அவரை அமெரிக்காவுக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளும் நடந்துள்ளது.

ஞானசேகருடன் இருக்கும்போதே இந்தியாவிற்கு வந்த பிரேம்குமாருடன், ஹேமா மாலனி சேர்ந்திருந்ததும் தெரிய வந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கடந்த 2015ம் ஆண்டு முதல் அதே மேட்ரிமோனியில் நான்கு ஐந்து பேருடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுடன் சேர்ந்து இருந்ததும், அதேபோல் அதில் பிரான்சில் இருக்கும் சுதாகர் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருக்கு ஹேமாமாலினி பற்றி தெரிய வர, அவர் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஞானசேகர், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த நிலையில் திடீரென்று ஒரு நாள் ஹேமமாலினி, தனது மகனுக்கு குழந்தை பிறந்துள்ளதால் அதனை பார்க்க பாண்டிச்சேரி செல்வதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

இதற்கிடையில் ஞானசேகர், அமெரிக்காவில் உள்ள பிரேம்குமாரை தொடர்பு கொண்டு பேசி ஹேமாமாலனியை பற்றி விலாவாரியாக கூறியதால் அதிர்ச்சி அடைந்த பிரேம்குமார், ஹேமாமாலினியிடம் பேசி அவரை பற்றி அனைத்தும் தெரிந்து விட்டது என்று கூறியுள்ளார். இந்த சூழலில் ஹேமாமாலினியை, புதுக்கோட்டைக்கு வரவழைத்து அவரை காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க ஞானசேகர் எப்போதும் போல அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இதையறிந்த ஹேமமாலினி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது மகன் விக்னேஸ்வரன் மற்றும் மருமகளுடன் சமத்துவபுரத்திற்கு சென்று ஞானசேகரை தாக்கி விட்டு அவரது வண்டி சாவி, மொபைல் போனையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஞானசேகர், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில், புதுச்சேரி வில்லியனூரை சேர்ந்த வில்லியனூர் தொகுதி பாஜ பொதுச் செயலாளர் ஹேமா மாலினி, அவரது மூத்த மகன் விக்னேஸ்வரன் வில்லியனூர் பாஜ இளைஞர் அணி மாவட்ட செயலாளராக உள்ளனர். டைவர்சி மேட்ரிமோனி மூலம் ஹேமமாலினி அவரது சொகுசு வாழ்க்கைக்காக பல ஆண்களை ஏமாற்றி உள்ளார். அதே போல் தன்னையும் ஏமாற்றி விட்டார். இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ’ என குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கையில் வாழ்ந்து பல ஆண்களை ஏமாற்றிய பாஜ பெண் நிர்வாகி: போட்டுக்கொடுத்த மகன் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,BJP ,Gnanasekar ,Namakkal district ,Baja ,
× RELATED வெப்ப அலை எதிரொலி; புதுக்கோட்டை அரசு...